Monday, May 15, 2017

Rain Note



Monsoon evenings/
drenched in the soundless drizzles/
bygone college (teenage) days/
alive only in memories.

Specks of rain/
that seeped into my core since childhood/
strung into a thooli (that gently rocks my soul)/ 
by the joy of rains current.

How ignorant are the winds/
(of my yearning for THAT moment)/
that dispensed today's rainclouds?!/

Good to have drizzles/
Getting drenched is fantastic/
Waiting (for it) is beyond!

Drapes the pores of my soul/
the love that pours down/
regardless (of when) ...

-------------------------------------------------------------
மழைக்குறிப்பு 


மாரிக்கால மாலைப்பொழுதுகளில் 
சாரலில் சப்தமின்றி நனைந்த 
கல்லூரி பதின்பருவ நாட்களை 
நினைவுகளில் மட்டுமே மீட்டெடுக்க இயலும். 

நிகழ் நாளிலும் மழை தரும் இன்பம் 
பால்ய காலம் தொட்டு என்னுள்ளே 
துளி துளியாய் இறங்கிய மழையின் 
துகளனைத்தையும் ஒரு கணத்தில் 
கோர்த்து தூளியாக்கி 
ஆன்மாவை தாலாட்டும்.

அந்நொடிக்கான என் ஏக்கம் தெரியுமா 
இன்று மேகத்தை துரத்திவிட்ட காற்றுக்கு?

சாரல் இனிது,  
நனைதல் இனிதினும் இனிது 
(மழைக்காய்) காத்திருத்தல் அதனினும் இனிது!  

என்று பெய்யினும்
உயிர் நனைக்கும் 
அன்பின் பெருமழை!


Just couldn't wait for the Monsoon to arrive soon! 

PS: Sheer poetry of a photograph, by Amir Hamja, a fantastic photographer from Bangladesh. Amir, this one is too good not to be in Creative Commons!

No comments:

Post a Comment