For the Woman in us!
2017 இலும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்ற குரல் உலகம் முழுவதும் சன்னமாக மட்டுமே ஒலித்தது. #Metoo போன்ற பகிர்வுகள், அதிர்வுகள், Time இதழின் அட்டைப்பட மரியாதை...இவை எல்லாவற்றையும் 15 நொடி புகழ் வெளிச்சம் பாய்ச்சிவிட்டு (Andy Warhol's 15 minutes fame has shrunk to 15 seconds now) மீண்டும் நாம் நுகர்வுப்பொருட்களை விளம்பரம்படுத்துவது அழகிய, இச்சையை தூண்டும் பெண் பிம்பங்களை முன் நிறுத்தித்தானே!
இதில் வேதனை என்னவென்றால், பெண்ணியம் பேசும் புகழ் பெற்ற மனிதர்களில் அநேகர், குறிப்பாக ஊடகத்துறையில் உள்ளவர்கள் இவற்றுக்கு துணை போவதுதான். Rediff போன்ற வலைத்தளங்கள் தொடர்ச்சியாக பெண்களை கொச்சைப்படுத்தும் செய்திகளை / கதைகளை நம்பியே இயங்குகின்றன என்றே சொல்வேன். ஒரு பெண்ணின் ஆடையற்ற முதுகு படத்தை காட்டி 'யாருன்னு கண்டுபுடி பாக்கலாம்' என்பதாகவே...இன்றுவரையில் சினிமாவை நம்பியே ஊடகங்கள், பெண்ணழகை நம்பியே சினிமாக்கள்...
மொபைல் போன் விற்பனைக்கும் தீபிகா படுகோனுக்கும் என்ன தொடர்பு? அவர் போன்றோர் ஏன் இவ்வகையிலான கொச்சைப்படுத்துதலுக்கு உடன்படுகின்றனர்? பணம், புகழ் போன்ற காரணங்கள் எல்லாம் சொறிந்துகொள்ள உதவும், தொல்லையின் வேர் களைய உதவாது. As long as we project women (and their sexuality) as a marketing tool to sell anything from a Pin to an Aeroplane, whole world would continue raping and miming any feminine form (age no bar, race no bar, color no bar, creed no bar).
ஆண்களால், ஆண்களுக்காக உருவான உலகம் என்ற எண்ணம் இன்றைய நவ யுவ, யுவதிகள் மனதிலும் இன்றுவரை களையப்படவில்லை (universal constitution).
Till we put a full stop to this exploitation, the tears men shed on atrocities committed on women will only be sinner's tears.
Recently I read an article about the subconscious desire of women to wear high heels. Crux of the article is that women 'look up' to men without the heels due to the natural height difference and so subconsciously long for 'equality', to look at the eyes without having to look up. So, wear high heels! This is Bullshit! At best it helps business sell millions of high heels that give chronic back pain to the wearers thereby reducing their potential 'eye to eye' time with men and increasing the collection in the coffers of medical business. See, the shoe makers don't give a damn about equality!
பெண்ணியம் பேசுபவர்களோ சம உரிமை என்ற சுய முழக்கத்தில் செவிடாகிறார்கள்.
ஆண்கள் வேறு, பெண்கள் வேறு. ஒரு பாலினரால் இயல்வது இன்னொரு பாலினரால் இயலாது. இதில் சமத்துவம் எங்கே?
வேண்டியது, வேண்டுவது என்னவோ தன்மானத்தோடு தன் வாழ்வை தான் விரும்பிய வகையில் அமைத்துக்கொள்வது; இரு பாலருக்கும் அதுவே. ஆண்டான் அடிமை என்ற மனப்பாவம், பெரும்பாவம். Unfortunately, every walk of life in our civilization works overtime to cement this high handed attitude...
A day shall come when the balance of power shall tilt in favour of women and then the laws that govern 'this' (high handed) constitution shall be torn to pieces.
கோவில் அல்லது இச்சைச்சந்தை என்ற extreme mindset இலிருந்து விடுபட்டு, சக மனுஷியாக, சக மானுடமாக இவர்களை மீட்டெடுக்க மீட்பர் யாரும் தேவையல்லை;
நாமே போதும்.
பெண்மை என்று google செய்து பாருங்கள், திகைத்துப்போவீர்கள்! ஆளாளுக்கு தோன்றியதையெல்லாம் பதிவிட்டிருக்கிறார்கள். ஆண்மை என்று...வேண்டாம், தங்க பஸ்ப ரேஞ்சுக்குதான் தகவல்கள்...
எளிமையாய் என் அறிவில் பட்டது:
"ஆண்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமையிலாத செயல்".
பெண்மையெனப்படுவதும் அதுவே!
இந்த புரிந்துணர்வுடன் வேண்டுவோம் தத்தமது ஆன்மாவிடம், சமத்துவம் அல்ல, தனித்துவம்; தனித்துவத்தை மதிக்கும் பக்குவம்.
எப்போது மரமாய், எப்போது வேராய் என்பதை அவரவர் சூழல் முடிவுசெய்யும்!
No comments:
Post a Comment